கோடநாடு விவகாரம்: மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட 7 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை


கோடநாடு விவகாரம்: மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட 7 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை
x
தினத்தந்தி 23 Jan 2019 3:02 PM GMT (Updated: 23 Jan 2019 3:02 PM GMT)

கோடநாடு விவகாரம் தொடர்பாக மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட 7 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

சென்னை,

கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பிருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆவணப்பட வீடியோவை தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் வெளியிட்டார். இதையடுத்து தமிழக அரசு அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. அவசர வழக்காக, வழக்கை நாளை எடுத்து கொள்வதாக நீதிபதி கல்யாண சுந்தரம் கூறி இருந்தார். 

இந்நிலையில், கோடநாடு விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் குறித்து ஆதாரமின்றி பேசவும், ஆவணங்களை வெயிடவும் கூடாது என்று மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட 7 பேருக்கு  நீதிபதி கல்யாண சுந்தரம் தடை விதித்துள்ளார்.  முதல்-அமைச்சரின் மனுவுக்கு 30-ம் தேதிக்குள் பதிலளிக்க மேத்யூ உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வழக்கு விசாரணையை ஜனவரி 30ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

Next Story