தமிழக காவல் துறையில் 23 பேருக்கு ஜனாதிபதி விருது குடியரசு தினத்தையொட்டி மத்திய அரசு அறிவிப்பு


தமிழக காவல் துறையில் 23 பேருக்கு ஜனாதிபதி விருது குடியரசு தினத்தையொட்டி மத்திய அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 25 Jan 2019 10:15 PM GMT (Updated: 25 Jan 2019 7:36 PM GMT)

தமிழக காவல் துறையில் 23 பேருக்கு ஜனாதிபதி விருது குடியரசு தினத்தையொட்டி மத்திய அரசு அறிவிப்பு

சென்னை,

குடியரசு தினத்தையொட்டி, தமிழக காவல்துறையில் பணியாற்றும் 23 பேருக்கு ஜனாதிபதி விருது வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை மத்தியஅரசு வெளியிட்டுள்ளது.

குடியரசு தினத்தையொட்டி, தமிழக காவல்துறையில் தகைசால் பணி மற்றும் பாராட்டத்தக்க பணிக்காக 23 பேருக்கு ஜனாதிபதி விருது வழங்கப்படுகிறது. இதுபற்றிய அறிவிப்பை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. அதன்விவரம் வருமாறு:-

தகைசால் பணிக்காக திருச்சி சிறப்பு புலனாய்வு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பி.கோவிந்தசாமியும், ஈரோடு சிறப்பு அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் இ.சொரிமுத்துவும் ஜனாதிபதி விருது பெறுகிறார்கள்.

பாராட்டத்தக்க பணிக்காக 21 பேர் ஜனாதிபதி விருது பெறுகிறார்கள். அவர்கள் விவரம் வருமாறு:-

1. மகேஸ்வரி - தென்சென்னை இணை போலீஸ் கமிஷனர்

2. காமினி - ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.

3. சாந்தி - போலீஸ் சூப்பிரண்டு, தமிழ்நாடு போலீஸ் அகாடமி, சென்னை

4. அசோக்குமார் - கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையம், சென்னை

5. ராஜேந்திரன் - கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, சிறப்புப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை சென்னை

6. கேசவன் - துணை போலீஸ் சூப்பிரண்டு பாதுகாப்புப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, சென்னை

கனகராஜ் ஜோசப்

7. தேவராஜ் - சென்னை பல்லாவரம் உதவி போலீஸ்

கமிஷனர்

8. வெற்றிச்செழியன் - போலீஸ் உதவி கமிஷனர், திருவல்லிக்கேணி, சென்னை

9. கனகராஜ் ஜோசப் - சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர்

10. சங்கர் - துணை போலீஸ் சூப்பிரண்டு, லஞ்ச ஒழிப்புத்துறை, சென்னை

11. ஆறுமுகம் - உதவி தளவாய், தமிழ்நாடு சிறப்பு காவல்படை, 3-ம் அணி, ஆவடி

12. சங்கரசுப்பிரமணியன் - இன்ஸ்பெக்டர், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை

13. ஜான் விக்டர் - போலீஸ் இன்ஸ்பெக்டர், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, பொன்னேரி

14. கணேசன் - போலீஸ் இன்ஸ்பெக்டர், லஞ்ச ஒழிப்புப்பிரிவு, காஞ்சீபுரம்

சப்-இன்ஸ்பெக்டர்கள்

15. ஜனார்த்தனன் - போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிறப்புப்பிரிவு, குற்றப்புலனாய்வுத்துறை, சென்னை

16. உலகநாதன் - சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், பாதுகாப்புபிரிவு, குற்றப்புலனாய்வுத்துறை சென்னை.

17. முத்துராமலிங்கம் - சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், லஞ்ச ஒழிப்புப்பிரிவு, ராமநாதபுரம்

18. சீனிவாசன் - சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், லஞ்ச ஒழிப்புப்பிரிவு, சென்னை

19. குணாளன் - சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், லஞ்ச ஒழிப்புப்பிரிவு தலைமையிடம் சென்னை

20. புருஷோத்தமன் - சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், லஞ்ச ஒழிப்புப்பிரிவு, சென்னை

21. பாஸ்கரன் - போலீஸ் ஏட்டு, சிறப்புப்பிரிவு, குற்றப்புலனாய்வுத்துறை, சென்னை

Next Story