‘பத்மஸ்ரீ’ விருது பெறும் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு முதல்-அமைச்சர் வாழ்த்து


‘பத்மஸ்ரீ’ விருது பெறும் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு முதல்-அமைச்சர் வாழ்த்து
x
தினத்தந்தி 26 Jan 2019 5:49 PM GMT (Updated: 26 Jan 2019 5:49 PM GMT)

‘பத்மஸ்ரீ’ விருது பெறும் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு முதல்-அமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

பத்மஸ்ரீ விருதினை பெற்று, தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்த சின்ன பிள்ளை, பங்காரு அடிகளார், நர்த்தகி நடராஜ், டாக்டர் ராமசாமி வெங்கடசாமி, டாக்டர் ஆர்.வி.ரமணி, சரத்கமல், ஆனந்தன் சிவமணி மற்றும் பிரபு தேவா ஆகியோருக்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும், எனது சார்பாகவும் வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, மேன்மேலும் பல விருதுகளை பெற எனது விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story