பிரதமர் மோடி 19-ந் தேதி குமரி வருகை ரூ.40 ஆயிரம் கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்


பிரதமர் மோடி 19-ந் தேதி குமரி வருகை ரூ.40 ஆயிரம் கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 28 Jan 2019 10:45 PM GMT (Updated: 28 Jan 2019 8:07 PM GMT)

பிரதமர் மோடி வருகிற 19-ந் தேதி குமரி மாவட்டம் வருகிறார்.

கன்னியாகுமரி, 

பிரதமர் மோடி வருகிற 19-ந் தேதி குமரி மாவட்டம் வருகிறார். அப்போது ரூ.40 ஆயிரம் கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

கன்னியாகுமரியில் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தின் முன்னேற்றத்துக்காக பிரதமர் மோடி ஆட்சி காலத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. டெல்லியில் இருப்பதை போன்று மதுரையிலும் மத்திய அரசு நிதியில் இருந்து பல கோடி ரூபாய் செலவில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அதேபோன்று தஞ்சை, நெல்லை உள்ளிட்ட இடங்களிலும் பல்நோக்கு ஆஸ்பத்திரி திறக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி வருகிற 10-ந் தேதி திருப்பூருக்கும், 19-ந் தேதி கன்னியாகுமரிக்கும் வருகிறார். எனவே அவர் வரும் போது பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்க இருக்கிறார். எனவே விழா நடைபெறுவதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

கன்னியாகுமரியில் நான்கு வழிச்சாலை நிறைவடையும் ஜீரோ பாயிண்ட் பகுதி கடந்த முறை பிரதமர் மோடி கலந்து கொண்ட விழா நடந்த இடம். இதுதவிர நாகர்கோவிலில் உள்ள மேலும் சில இடங்களை பார்வையிட்டு வருகிறோம்.

குமரி மாவட்டத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடிக்கு மேல் திட்டங்களை மோடி தந்துள்ளார். அந்த திட்டங்களை தொடங்கி வைப்பதற்கும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் விழா நடத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story