சென்னையில் அரசு பள்ளிகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது -முதன்மை கல்வி அதிகாரி


சென்னையில் அரசு பள்ளிகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது -முதன்மை கல்வி அதிகாரி
x
தினத்தந்தி 29 Jan 2019 5:22 AM GMT (Updated: 29 Jan 2019 5:22 AM GMT)

சென்னையில் அரசு பள்ளிகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது என முதன்மை கல்வி அதிகாரி திருவளர்செல்வி கூறி உள்ளார்.

சென்னை

பள்ளிக்கல்வி முதன்மை கல்வி அலுவலர் கூறியதாவது:

சென்னையில் பணியாற்றும் ஆசிரியர்கள் காலை 10 மணிக்குள் பணிக்கு திரும்ப  வேண்டும். பணிக்கு திரும்பாவிட்டால் தற்காலிக ஆசிரியர் நியமிக்கப்படுவர். சென்னையில் தற்காலிக ஆசிரியர் பணிக்காக 2000 பேர் காத்து இருக்கின்றனர் 

திருச்சியில் 80 சதவீத ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பி உள்ளனர் என  மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வட்டாரங்கள் தகவல் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 95 சதவீதம் பேர் பணிக்கு திரும்பினர் என பள்ளிக்கல்வித்துறை  இயக்குனர் கூறி உள்ளார்.

சென்னை முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி கூறியதாவது:-

சென்னையில் 4 ஆசிரியர்கள் மட்டுமே இன்னும் பணிக்கு திரும்பவில்லை, 99.9% ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டனர் . சென்னையில் அரசு பள்ளிகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது  என கூறினார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 700 ஆசிரியர்கள்  இன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1200 ஐ தாண்டியது.

விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர் என  பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கூறி உள்ளார்.

Next Story