கோடநாடு விவகாரம் ; மேத்யூ சாமுவேல் மீதான வழக்கின் விசாரணைக்கு தடை- சென்னை ஐகோர்ட்


கோடநாடு விவகாரம் ; மேத்யூ சாமுவேல் மீதான வழக்கின் விசாரணைக்கு தடை- சென்னை ஐகோர்ட்
x
தினத்தந்தி 29 Jan 2019 5:35 AM GMT (Updated: 29 Jan 2019 5:35 AM GMT)

கோடநாடு விவகாரம் தொடர்பாக ஆவணப்படம் வெளியிட்ட மேத்யூ சாமுவேல் மீதான வழக்கின் விசாரணைக்கு சென்னை ஐகோர்ட் 4 வாரம் தடை விதித்து உள்ளது.

சென்னை

கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பிருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆவணப்பட வீடியோவை தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் வெளியிட்டார். இதையடுத்து தமிழக அரசு அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும் அவர் மீது அ.தி.மு.க ஐடி பிரிவு நிர்வாகி சென்னை மத்திய குற்றப்பிரிவு  போலீசில் வழக்குப்பதிவு செய்து உள்ளார்.

கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வீடியோ விவகாரத்தில் தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் மீதான வழக்கின் விசாரணைக்கு 4 வாரம் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

Next Story