மழைநீர் சேகரிப்பு திட்டத்தை முறையாக அமல்படுத்தக்கோரி வழக்கு தமிழக அரசுக்கு, மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்


மழைநீர் சேகரிப்பு திட்டத்தை முறையாக அமல்படுத்தக்கோரி வழக்கு தமிழக அரசுக்கு, மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்
x
தினத்தந்தி 29 Jan 2019 9:30 PM GMT (Updated: 29 Jan 2019 8:22 PM GMT)

மழைநீர் சேகரிப்பு திட்டத்தை முறையாக அமல்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு, மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மதுரை,

மதுரை மீனாம்பாள்புரத்தை சேர்ந்த சதீஷ்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

தமிழகத்தில் கடந்த 2001-ம் ஆண்டு மழைநீர் சேகரிப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டது. மாநகராட்சி விதிகள் மற்றும் கட்டிட விதிகளின்படி புதிதாக கட்டப்படும் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு முறை அமல்படுத்த வேண்டும் என்று சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. காலப்போக்கில் மழைநீர் சேகரிப்பு திட்டம் குறித்து முறையாக கண்காணிக்கப்படவில்லை. இதனால் தமிழகத்தில் தற்போது மழைநீர் சேகரிப்பு திட்டம் கேள்விக்குறியாகிவிட்டது. மழைநீர் சேகரிப்பு திட்டம் முறையாக செயல்படுத்தப்பட்டு, மழைநீரை சேமித்திருந்தால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து இருக்கும். எனவே தமிழகம் முழுவதும் மழைநீர் சேகரிப்பு திட்டம் முறையாக அமல்படுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முடிவில், இதுகுறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story