மருத்துவ சேவையில் மதுரை 2-வது தலைநகரமாக மாறும் - அமைச்சர் விஜயபாஸ்கர்


மருத்துவ சேவையில் மதுரை 2-வது தலைநகரமாக மாறும் - அமைச்சர் விஜயபாஸ்கர்
x
தினத்தந்தி 30 Jan 2019 7:59 AM GMT (Updated: 30 Jan 2019 7:59 AM GMT)

மருத்துவ சேவையில் மதுரை 2-வது தலைநகரமாக மாறும் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

14 வருடங்களாக தமிழ்நாட்டில் போலியோ இல்லை.  2025-ல் காசநோய் இல்லாத சூழலை கொண்டு வருவோம்.  0.46 என்ற அளவில் உள்ள தொழுநோயை இல்லாமல் ஆக்குவோம். சென்னையை தொடர்ந்து மதுரை 2-வது மருத்துவ தலைநகரமாகும்.  தொழுநோயால் பாதிக்கப்பட்டு, சாலைகளில் பிச்சை எடுப்பவர்களை மீட்டு, அவர்கள் சிறப்பான எதிர்காலத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறினார்.

Next Story