அ.தி.மு.க.வில் இருக்கும் அனைத்து அடிப்படை உறுப்பினர்களும் தேர்தலில் போட்டியிட தகுதி இருக்கிறது -ஓ.பன்னீர்செல்வம்


அ.தி.மு.க.வில் இருக்கும் அனைத்து அடிப்படை உறுப்பினர்களும் தேர்தலில் போட்டியிட தகுதி இருக்கிறது -ஓ.பன்னீர்செல்வம்
x
தினத்தந்தி 6 Feb 2019 5:10 AM GMT (Updated: 6 Feb 2019 5:10 AM GMT)

அ.தி.மு.க.வில் இருக்கும் அனைத்து அடிப்படை உறுப்பினர்களும் தேர்தலில் போட்டியிட தகுதி இருக்கிறது என்று தனது மகன் விருப்ப மனு வாங்கியது குறித்து ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

சென்னை

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.கவில் இருக்கும் அனைத்து அடிப்படை உறுப்பினர்களும் தேர்தலில் போட்டியிட தகுதி இருக்கிறது. அந்த வகையில் எனது மகன் விருப்ப மனு அளித்து உள்ளார்.

தகுதி இருக்கும் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மக்கள் ஏற்றால் அவர்கள் அரசியலில் நீடிப்பார்கள். அதிமுக தலைமையில் தான் கூட்டணி  அமையும். தேசிய, மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்து அதிமுக  பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என கூறினார்.

Next Story