மதுக்கடைகளை மூட புதிய சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


மதுக்கடைகளை மூட புதிய சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 7 Feb 2019 8:30 PM GMT (Updated: 7 Feb 2019 8:18 PM GMT)

தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து ஐகோர்ட்டின் மதுரை அமர்வு வலியுறுத்தியுள்ளது.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கிராமசபை கூட்டங்களை கூட்டி, அதில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினால், அதனடிப்படையில் மதுக்கடைகளை மூடச்செய்யலாம் என்று ஐகோர்ட்டு யோசனை தெரிவித்துள்ளது. இந்த யோசனை மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.

மதுக்கடைகளை மட்டும் நம்பியிருக்காமல் வருவாய்க்கு வேறு வழிகளைக் கண்டறிய வேண்டும் என்றும் கோர்ட்டு தெரிவித்து இருக்கிறது. மதுக்கடைகளை மூடுவதால் ஏற்படும் வருவாய் இழப்புகளை ஈடு செய்ய ஏராளமான யோசனைகளை பா.ம.க. நிழல் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளது.

எனவே, மக்கள் விருப்பப்படி மதுக்கடைகளை மூட வசதியாக, கிராமசபைகளில் வாக்கெடுப்பு நடத்தி மதுக்கடைகளை மூட வகை செய்யும் புதிய சட்டத்தை தமிழக அரசு உடனடியாக இயற்ற வேண்டும். அதற்கெல்லாம் மேலாக ஒரே கட்டமாக அனைத்து மதுக்கடைகளையும் மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதாக தமிழக அரசு அறிவித்தால் அதை மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Next Story