மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும், கூட்டணி ஆட்சியில் அதிமுக முக்கிய பங்கு வகிக்கும்- தம்பிதுரை


மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும், கூட்டணி ஆட்சியில் அதிமுக முக்கிய பங்கு வகிக்கும்- தம்பிதுரை
x
தினத்தந்தி 20 Feb 2019 8:31 AM GMT (Updated: 20 Feb 2019 8:31 AM GMT)

மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும், கூட்டணி ஆட்சியில் அதிமுக முக்கிய பங்கு வகிக்கும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.

கரூர்

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியதாவது:-

மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும், கூட்டணி ஆட்சியில் அதிமுக முக்கிய பங்கு வகிக்கும்.மக்களவைத் தேர்தல் கூட்டணியில் அதிமுகவுடன் பாமக இணைந்துள்ளது வரவேற்கத்தக்கது. தேர்தல் கூட்டணி என்பது கொள்கை ரீதியில் அமைக்கப்படுவதல்ல. எதிரியை வீழ்த்த வேண்டும், மத்தியில் நல்லாட்சி அமைய வேண்டும் என்பதற்காகத்தான். இதனால் கூட்டணி வைத்துள்ள கட்சியின் கொள்கையை முழுமையாக ஏற்றுக்கொண்டதாக அர்த்தமல்ல.

அவர்களின் கொள்கை வேறு, எங்களின் கொள்கை வேறு. இரு கட்சிகளும் ஒன்றையொன்று அந்தந்த காலகட்ட செயல்பாடுகளுக்கேற்ப விமர்சித்துள்ளன. ஜெயலலிதா இருந்தபோதே பாமகவுடன் 1998, 2009 மக்களவைத் தேர்தல், 2001 சட்டப்பேரவைத் தேர்தல் ஆகியவற்றில் கூட்டணி வைத்துள்ளோம்.

 திமுக, காங்கிரஸ் கூட்டணி கொள்கை இல்லாத கூட்டணி. இலங்கைத் தமிழர் படுகொலையை கண்டித்து காங்கிரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற திமுக, 2014-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைக்கவில்லை. அதன்பிறகு மீண்டும் கூட்டணி வைத்தது. உயிரிழந்த தமிழர்கள் தற்போது உயிருடன் வந்துவிட்டனரா?. எனவே, அவர்களின் கூட்டணி கொள்கை இல்லாத கூட்டணியாகும்.

அதிமுக வலிமையான கட்சி. அடுத்து மத்தியில் அமையும் ஆட்சியில் அதிமுக பங்கேற்பதற்கு வாய்ப்புள்ளது என்றார்.

Next Story