நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. யாருடன் கூட்டணி? டி.டி.வி.தினகரன் பேட்டி

நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. யாருடன் கூட்டணி? டி.டி.வி.தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 20 Feb 2019 7:26 PM GMT (Updated: 20 Feb 2019 7:26 PM GMT)

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நேற்று சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

சேலம், 

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நேற்று சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இந்த தேர்தலுடன் முடிய போகிற அ.தி.மு.க.வுடன் சிலர் கூட்டணி வைத்துள்ளனர். அதாவது, அ.தி.மு.க.வுடன் பா.ம.க., பா.ஜனதா கட்சிகள் கூட்டணி வைத்திருப்பது அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கயிற்றை கட்டிக்கொண்டு கிணற்றுக்குள் குதிப்பதற்கு சமம்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சி நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து இன்னும் ஒரு வாரத்தில் தெரிவிக்கப்படும்.

இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறினார்.

Next Story