அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை எப்படி இருக்க வேண்டும்? எடப்பாடி பழனிசாமி அறிவுரை


அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை எப்படி இருக்க வேண்டும்? எடப்பாடி பழனிசாமி அறிவுரை
x
தினத்தந்தி 21 Feb 2019 7:04 PM GMT (Updated: 21 Feb 2019 7:04 PM GMT)

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

சென்னை, 

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு தேர்தல் அறிக்கையில் என்னென்ன திட்டங்கள் இடம்பெற வேண்டும்?, பொதுமக்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய வாக்குறுதிகள் என்ன? என்பது குறித்து விளக்கினார். மேலும், மாநிலத்தில் நிலவிவரும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் எடுத்துரைத்தார். தேர்தல் அறிக்கையில் எக்காரணம் கொண்டும் இலவசம் சார்ந்த அறிவிப்புகள் இடம்பெறக்கூடாது என்று அவர் வலியுறுத்தி கூறியதாக தெரிகிறது.

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செய்தி தொடர்பாளர் பொன்னையன், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், முன்னாள் எம்.பி.க்கள் மனோஜ் பாண்டியன், ரவி பெர்னாட், செம்மலை எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இனிவரும் நாட்களில் அ.தி.மு.க. தேர்தல் பிரசாரக்குழு கூட்டமும் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக அ.தி.மு.க. பேச்சாளர்களுக்கு பயிற்சி வகுப்புகளும் நடைபெற உள்ளன.

Next Story