திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு


திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 22 Feb 2019 3:09 PM GMT (Updated: 22 Feb 2019 3:09 PM GMT)

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க. தலைமையில் ஓர் அணியும், தி.மு.க. தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிட இருக்கின்றன.

கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக இரு அணிகளில் உள்ள கட்சிகள் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

தி.மு.க. கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் தி.மு.க. சார்பில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்தநிலையில், அண்ணா அறிவாலாயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில்   திமுக - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து  இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திமுக-இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டதை முழு மனதோடு ஏற்றுக்கொள்கிறோம். 

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கிய ஸ்டாலினுக்கு நன்றி. தொகுதிப்பட்டியலை திமுகவிடம் அளித்துள்ளோம் விரைவில் அவர்கள் அறிவிப்பார்கள்.

 எங்களுடைய சொந்த சின்னமான ஏணி சின்னத்திலேயே போட்டியிட உள்ளோம்.  அதிமுக- பாஜகவி கூட்டணிக்கு எந்த வாக்கும் கிடைக்காது. இஸ்லாமிய வாக்குகள் அனைத்தும் திமுக அணிக்கே வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story