‘விஜயகாந்தை மு.க.ஸ்டாலின் சந்திப்பதில் தவறில்லை’ கனிமொழி பேட்டி


‘விஜயகாந்தை மு.க.ஸ்டாலின் சந்திப்பதில் தவறில்லை’ கனிமொழி பேட்டி
x
தினத்தந்தி 22 Feb 2019 5:11 PM GMT (Updated: 22 Feb 2019 5:11 PM GMT)

‘விஜயகாந்தை மு.க.ஸ்டாலின் சந்திப்பதில் தவறில்லை’ என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

சென்னை

தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் நடக்க உள்ள பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு கனிமொழி எம்.பி.  சென்றார்.

 அப்போது அவரிடம் நிருபர்கள் ‘தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை, மு.க.ஸ்டாலின் சந்தித்ததில் ஏதேனும் முக்கியத்துவம் உள்ளதா?’ என கேட்டனர், அதற்கு பதில் அளித்த கனிமொழி ‘விஜயகாந்த் உடல் நலம் விசாரிக்க மு.க.ஸ்டாலின் சென்று இருக்கலாம். உடல் நலம் சரியில்லாமல் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்தவரை மு.க.ஸ்டாலின் சந்திப்பதில் தவறில்லை’ என்றார்.

Next Story