நாடாளுமன்றத் தேர்தலில் மோதிரம் சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் விசிக கடிதம்


நாடாளுமன்றத் தேர்தலில் மோதிரம் சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் விசிக கடிதம்
x
தினத்தந்தி 24 Feb 2019 10:06 AM GMT (Updated: 24 Feb 2019 10:06 AM GMT)

நாடாளுமன்றத் தேர்தலில் மோதிரம் சின்னம் ஒதுக்கக்கோரி டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடிதம் எழுதியுள்ளது.

தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் உள்ளன.  திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து திமுக கூட்டணியுடன்  இணைந்து போட்டியிட உள்ள  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தங்களுக்கு இரண்டு இடங்களை ஒதுக்குமாறு திமுக தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளதுதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் கட்சிக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கக் கோரி டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடிதம் எழுதியுள்ளது.

Next Story