மக்களை விலைக்கு வாங்க நினைக்கும் கூட்டம் மக்கள் சாட்டையடி கொடுக்க வேண்டும் - வைகோ


மக்களை விலைக்கு வாங்க நினைக்கும் கூட்டம் மக்கள் சாட்டையடி கொடுக்க வேண்டும் - வைகோ
x
தினத்தந்தி 24 Feb 2019 10:12 AM GMT (Updated: 24 Feb 2019 10:12 AM GMT)

பெரியார், அண்ணா காலத்தில் இல்லாத அச்சுறுத்தலும், ஆபத்தும் தற்போது தமிழகத்திற்கு ஏற்பட்டிருப்பதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

தஞ்சையில் நடைபெற்ற திராவிடர் கழகத்தின் சமூகநீதி மாநாட்டில் ​பேசிய வைகோ, 

டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் தராமல் வறண்ட பாலைவனமாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக குற்றம்சாட்டி உள்ளார். எண்ணெய் நிறுவனங்களுக்கு டெல்டா பகுதிகளை விற்க அரசு முடிவெடுத்து விட்டதாக குற்றம்சாட்டிய வைகோ, நம்மை விலைக்கு வாங்க நினைக்கும் சமூக விரோதக் கூட்டத்துக்கு  மக்கள் சாட்டையடி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Next Story