ஆரவாரம் இல்லாத யானையிடம் அடாவடியான புலி தோற்றுப்போகும் -முதலமைச்சர் பழனிசாமி பேச்சு


ஆரவாரம் இல்லாத யானையிடம் அடாவடியான புலி தோற்றுப்போகும் -முதலமைச்சர் பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 25 Feb 2019 8:40 AM GMT (Updated: 25 Feb 2019 8:40 AM GMT)

சேலத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ஆரவாரம் இல்லாத யானையிடம் அடாவடியான புலி தோற்றுப்போகும் என்று முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.

சென்னை,

சேலத்தில் பல்வேறு துறைகள் சார்பில் ரூ.64.73 கோடியில் 35 முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். ரூ.202.47 கோடி மதிப்பீட்டிலான 34 புதிய பணிகளுக்கும் முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

அதனைதொடர்ந்து  நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:-

தமிழக அரசு சுயஉதவி குழுக்களுக்கு அதிகளவில் கடன் உதவுகளை வழங்கி சாதனை படைத்து வருகிறது. தமிழகத்தில் முதல் முறையாக சேலத்தில் 325 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் இரட்டை அடுக்கு மேம்பால பணிகள் விரைவில் முடிக்கப்பட உள்ளது.  ஆரவாரம் இல்லாத யானையிடம் அடாவடியான புலி தோற்றுப்போகும். யார் யானை? யார் புலி? என்பது மக்களுக்கு தெரியும். அனைத்து ஊர்களிகளிலும் அனைத்து தேவைகளும் வழங்கப்படுகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில்  முதலமைச்சர் பழனிசாமி கூறியதாவது:-

பாமகவுடன் அதிமுக கூட்டணி வைத்தது பற்றிய கேள்விக்கு பழனிசாமி விளக்கம் அளித்தார். கூட்டணி வேறு, கொள்கை வேறு. தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடக்கிறது. கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்த பிறகு தான் அதிமுக போட்டியிடும் தொகுதிகள் குறித்து முடிவாகும். குடும்பத்தினர் உரிய தகவல் தந்தால் முகிலனை மீட்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் எனக்கூறினார்.

Next Story