பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தலைவர் பொறுப்பில் இருந்து துணைவேந்தர் சூரப்பா விலகல்


பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தலைவர் பொறுப்பில் இருந்து துணைவேந்தர் சூரப்பா விலகல்
x
தினத்தந்தி 27 Feb 2019 5:54 AM GMT (Updated: 27 Feb 2019 5:57 AM GMT)

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தலைவர் பொறுப்பில் இருந்து துணைவேந்தர் சூரப்பா விலகி உள்ளார்.

சென்னை,

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தலைவர் பொறுப்பினை அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா வகித்து வந்துள்ளார்.  இந்த நிலையில் அந்த பொறுப்பில் இருந்து அவர் விலகி உள்ளார்.

அண்ணா பல்கலை கழகம் கலந்தாய்வை நடத்துகின்றது.  இதனால் நிர்வாக சிக்கல் ஏற்படுகிறது என சூரப்பா தெரிவித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து இவரது பதவி விலகல் கடிதம் உயர் கல்வி துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கடிதத்தினை உயர் கல்வி துறையும் ஏற்று கொண்டது.

இதனால் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை இதற்கு முன்பு நடத்தி வந்த தொழில் நுட்ப கல்வி இயக்ககம் நடத்த வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டது.  இந்த நிலையில், இதன் புதிய தலைவராக தொழில்நுட்ப கல்வி இயக்குனர் விவேகானந்தன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

Next Story