அரசு பணிகளில் சேருவதற்கு ‘யாரிடமும் பணம் வாங்கவோ, கொடுக்கவோ கூடாது’ போலீஸ் டி.ஜி.பி. எச்சரிக்கை


அரசு பணிகளில் சேருவதற்கு ‘யாரிடமும் பணம் வாங்கவோ, கொடுக்கவோ கூடாது’ போலீஸ் டி.ஜி.பி. எச்சரிக்கை
x
தினத்தந்தி 28 Feb 2019 5:06 PM GMT (Updated: 28 Feb 2019 5:06 PM GMT)

அரசு பணிகளில் சேருவதற்கு ‘யாரிடமும் பணம் வாங்கவோ, கொடுக்கவோ கூடாது’ என்று போலீஸ் டி.ஜி.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை, 

போலீஸ் டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரன் இரவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

எந்த ஒரு நபரும் அரசு பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணியில் சேருவதற்கோ அல்லது எந்த ஒரு மருத்துவ கல்லூரி மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு எவரிடமும் எந்தவிதமான சட்டவிரோத பணம் கொடுக்கல், வாங்கல்களில் ஈடுபடக்கூடாது. 

இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் இவருவர் மீதும் (பணம் கொடுப்பவர்/ பணம் பெறுபவர்) உரிய குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல் துறை சார்பாக அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story