விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கப்படவில்லை


விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கப்படவில்லை
x
தினத்தந்தி 10 March 2019 10:40 AM IST (Updated: 10 March 2019 10:40 AM IST)
t-max-icont-min-icon

விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிய சின்னம், தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் மோதிரம் சின்னம் ஒதுக்கக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் கமிஷனில் மனு கொடுத்து இருந்தது. இந்த நிலையில், மோதிரம் சின்னம் தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இதன் மூலம் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வேறு சின்னம், தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்படும் என தெரிகிறது. மோதிரம் சின்னம் கிடைக்காததால், வேறு சின்னத்தை கேட்க விடுதலை சிறுத்தைகள் கட்சி முடிவு செய்துள்ளது. 

Next Story