இணையதளம் மூலம் பட்டா பதிவிறக்கம் செய்து கொள்ளும் திட்டம் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்


இணையதளம் மூலம் பட்டா பதிவிறக்கம் செய்து கொள்ளும் திட்டம் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்
x
தினத்தந்தி 10 March 2019 9:00 PM GMT (Updated: 10 March 2019 8:33 PM GMT)

இணையதளம் மூலம் பட்டா பதிவிறக்கம் செய்துகொள்ளும் புதிய திட்டத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

சென்னை, 

இணையதளம் மூலம் பட்டா பதிவிறக்கம் செய்துகொள்ளும் புதிய திட்டத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

இணையதளம் மூலம் பட்டா

பதிவுத்துறை செயல்பாடுகள் அனைத்தும் முழுமையாக கணினி மயமாக்கப்பட்டு வருகிறது. சார்-பதிவாளர் அலுவலகங்கள் கணினி மயமாக்கப்படுவதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் பதிவறையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆவணங் களை ஒளிவருடல் செய்து பாதுகாத்திட 89 கோடியே 17 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

முதற்கட்டமாக, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 5 சார்பதிவாளர் அலுவலகங்களில் பாதுகாக்கப்பட்டு வரும் பழைய ஆவணங்கள் அனைத்தும் முழுமையாக ஒளிவருடல் செய்யப்பட்டுள்ளன.

இதன்மூலம் வருவாய்த்துறையினர் பழைய ஆவணங்களை பொதுமக்களிடம் கோராமல் இணையதளம் வழியாக சரிபார்த்து பட்டா வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் உட்பிரிவு தேவைப்படாத இனங்களுக்கு இணையதளம் மூலம் பட்டாவை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கிவைத்தார்.

தமிழ்நாடு நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குனரகத்தில் காலியாக உள்ள 35 இளநிலை உதவியாளர் மற்றும் 23 தட்டச்சர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணையையும் வழங்கினார்.

குடிநீர் திட்டப்பணிகள்

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மணலி, சின்னசேக்காடு, மணப்பாக்கம் மற்றும் காரம்பாக்கத்தில் 241 கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள பாதாள சாக்கடைத் திட்டங்கள், நெற்குன்றத்தில் 100 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள பாதாள சாக்கடை திட்டம், முகலிவாக்கத்தில் 77 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள பாதாள சாக்கடைத் திட்டம் என மொத்தம் 666 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்தின் புதிய திட்டப்பணிகளுக்கும்,

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வீடுகளில் குப்பைகளை சேகரிக்க 7 கோடியே 17 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 411 எண்ணிக்கையிலான பேட்டரி மூலம் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களை பெருநகர சென்னை மாநகராட்சியின் பயன்பாட்டிற்காக வழங்கிடும் பொருட்டு 7 ஓட்டுநர்களுக்கு அந்த வாகனங்களுக் கான சாவிகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

குளிர்பதன சேமிப்பு கிடங்கு

கூட்டுறவுத்துறை சார்பில் சென்னை, கோயம்பேடு காய்கனி மொத்த விற்பனை வளாகத்தில் 2 கோடியே 15 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 2500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நவீனமயமாக்கப்பட்ட குளிர்பதன சேமிப்பு கிடங்கினையும்,

சென்னை, காமராசர் சாலையில் உள்ள சென்னை பல்கலைக்கழக இணைவகமான மெரினா வளாகத்தில் 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள தொல்காப்பியர் திருஉருவச் சிலையையும் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

Next Story