அதிமுக நிர்வாகி கொலை வழக்கு: 11 பேருக்கு தலா 3 ஆயுள் தண்டனையை உறுதி செய்து ஐகோர்ட் மதுரை கிளை


அதிமுக நிர்வாகி கொலை வழக்கு: 11 பேருக்கு தலா 3 ஆயுள் தண்டனையை உறுதி செய்து ஐகோர்ட் மதுரை கிளை
x
தினத்தந்தி 22 March 2019 10:28 AM GMT (Updated: 22 March 2019 10:28 AM GMT)

சிவகங்கையில் அ.தி.மு.க நிர்வாகி உள்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 11 பேருக்கு தலா 3 ஆயுள் தண்டனையை உறுதி செய்து ஐகோர்ட் மதுரை கிளை தீர்ப்பு வழங்கி உள்ளது.

மதுரை: 

சிவகங்கையில் அதிமுக நிர்வாகி கதிரேசன், அவரது மகன் பிரசன்னா மற்றும் ஓட்டுநர் பூமிநாதன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கீழமை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உயர்நீதிமன்ற மதுரை கிளை உறுதி செய்தது.

இதனை எதிர்த்து ஐகோர்ட் மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், குற்றவாளிகள் 11 பேருக்கு தலா 3 ஆயுள் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது.

Next Story