மதுரை மத்திய சிறையில் பேச்சுவார்த்தைக்கு பின் இயல்புநிலை திரும்பியது; வட்டாட்சியர் கோபிதாஸ்


மதுரை மத்திய சிறையில் பேச்சுவார்த்தைக்கு பின் இயல்புநிலை திரும்பியது; வட்டாட்சியர் கோபிதாஸ்
x
தினத்தந்தி 23 April 2019 3:25 PM GMT (Updated: 23 April 2019 3:25 PM GMT)

மதுரை மத்திய சிறையில் கைதிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின் இயல்புநிலை திரும்பியது என வட்டாட்சியர் கோபிதாஸ் தெரிவித்து உள்ளார்.

மதுரை,

மதுரை மத்திய சிறையில் கைதிகள் மற்றும் போலீசார் இடையே இன்று கடும் மோதல் ஏற்பட்டது.  சிறையில் உள்ள கட்டிடத்தின் மதில் சுவர் மீது ஏறி நின்று கைதிகள் போராட்டம் நடத்தினர்.

காவல் துறையினர் தங்களை துன்புறுத்துவதாக கூறி, சட்டைகளை களைந்து கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  காவலர்கள் மீது கைதிகள் கற்களை கொண்டு வீசினர் என கூறப்படுகிறது.  அவர்கள் வீசிய கற்கள் சாலைகளில் விழுந்தது.  இதனால் வாகன போக்குவரத்து பாதிப்பு அடைந்தது.  தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்பட்டது.

இதன்பின் வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக கூடுதல் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.  கைதிகளை கீழே இறங்கும்படி கூறி அவர்களிடம் காவல் துறை உயரதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்த பேச்சுவார்த்தைக்கு பின் இயல்புநிலை திரும்பியது என வட்டாட்சியர் கோபிதாஸ் தெரிவித்து உள்ளார்.  கைதிகள் போராட்டம் தொடர்பாக சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி விசாரணை நடத்தி வருகிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.

Next Story