சென்னை பயணத்தை முடித்துக்கொண்டு வெங்கையா நாயுடு திருப்பதி சென்றார்


சென்னை பயணத்தை முடித்துக்கொண்டு வெங்கையா நாயுடு திருப்பதி சென்றார்
x
தினத்தந்தி 24 April 2019 5:07 PM GMT (Updated: 24 April 2019 5:07 PM GMT)

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கடந்த 22–ந் தேதி பெங்களூருவில் இருந்து தனி விமானத்தில் சென்னை வந்தார்.

சென்னை, 

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கடந்த 22–ந் தேதி பெங்களூருவில் இருந்து தனி விமானத்தில் சென்னை வந்தார். சென்னை மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர் ஆகிய நகரங்களில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொண்டார்.

சென்னை சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு  காலை வெங்கையா நாயுடு, சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருப்பதி புறப்பட்டு சென்றார்.

முன்னதாக அவரை கவர்னர் பன்வாரிலால் புரோகித், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா மற்றும் அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.

Next Story