பானி புயல்; சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் மே 2, 3ந்தேதிகளில் 9 ரெயில்கள் ரத்து


பானி புயல்; சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் மே 2, 3ந்தேதிகளில் 9 ரெயில்கள் ரத்து
x
தினத்தந்தி 1 May 2019 3:48 PM GMT (Updated: 1 May 2019 3:48 PM GMT)

பானி புயலை முன்னிட்டு சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை மற்றும் நாளை மறுநாள் இயக்கப்படவிருந்த 9 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

சென்னை,

சென்னையில் இருந்து 420 கிலோமீட்டர் தொலைவில் தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த பானி புயல், அதிதீவிர புயலாக மாறி வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 3 ஆம் தேதி ஒடிசா மாநிலம் பூரி அருகே கரையை கடக்கும்.

இதனால் தமிழகத்துக்கு பாதிப்பில்லை.  கடலோர மாவட்டங்களில் லேசான காற்று வீசக்கூடும்.  சென்னையில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இந்த புயலை தொடர்ந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து நாளை மற்றும் நாளை மறுநாள் இயக்கப்படவிருந்த 9 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன என தென்னக ரெயில்வே தெரிவித்து உள்ளது.

இதன்படி, யஷ்வந்த்பூர் - முசாபர்பூர், சந்திரகாசி, ஹல்டியா, சாலிமர், ஹவுரா ஆகிய விரைவு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.  இதனுடன் திருவனந்தபுரம் - சாலிமர், யஷ்வந்தபூர் - ஹவுரா செல்லும் ரெயில்கள் உள்பட 3 விரைவு ரெயில்கள் மற்றும் நாளை மறுநாள் சென்ட்ரல் - ஹவுரா கோரமண்டல் ஆகிய விரைவு ரெயில்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது.

Next Story
  • chat