நாளை காலை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி


நாளை காலை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 24 May 2019 3:48 PM GMT (Updated: 24 May 2019 3:48 PM GMT)

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார்.

சென்னை,

டெல்லியில் நாளை தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார். 

அமைச்சரவையில் கூட்டணிக் கட்சியினருக்கு இடம் தருவது பற்றி ஆலோசனை நடத்தப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்புவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து  வரும் 30-ம் தேதி 2-வது முறையாக பிரதமர் மோடி இந்திய பிரதமராக பதவி ஏற்கிறார். இந்த விழாவில், பங்கேற்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். 

இதற்காக டெல்லி செல்லும் அவர்கள் வரும், 28, 29, 30 தேதிகளில் டெல்லியில் தங்கி இருப்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story