குடிநீர் பிரச்சினை: முதல்–அமைச்சர் தலைமையில் இன்று ஆய்வு கூட்டம்


குடிநீர் பிரச்சினை: முதல்–அமைச்சர் தலைமையில் இன்று ஆய்வு கூட்டம்
x
தினத்தந்தி 20 Jun 2019 6:45 PM GMT (Updated: 20 Jun 2019 5:43 PM GMT)

குடிநீர் பிரச்சினை: முதல்–அமைச்சர் தலைமையில் இன்று ஆய்வு கூட்டம்

சென்னை, 

தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. தலைநகர் சென்னையில் குடிநீர் பிரச்சினை தலைவிரித்து ஆடுகிறது. இந்தநிலையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் என்னென்ன? என்பது குறித்து ஆய்வு கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.45 மணிக்கு நடைபெறுகிறது. 

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த ஆய்வு கூட்டத்தில் துறை சார்ந்த அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை சரிசெய்வது எப்படி? என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. மேலும் குடிநீர் பிரச்சினையை சரிசெய்ய சில முடிவுகளும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story