காங்கிரசுக்கு எத்தனை நாள் பல்லாக்கு தூக்குவது? உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டி - கே.என்.நேரு ஆவேசம்


காங்கிரசுக்கு எத்தனை நாள் பல்லாக்கு தூக்குவது? உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டி - கே.என்.நேரு ஆவேசம்
x
தினத்தந்தி 22 Jun 2019 5:56 AM GMT (Updated: 22 Jun 2019 5:56 AM GMT)

காங்கிரசுக்கு எத்தனை நாள் பல்லாக்கு தூக்குவது? உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டியிட வேண்டும் என திருச்சியில் திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கே.என்.நேரு பேசினார்.

திருச்சி,

குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் பொதுமக்களை திரட்டி இன்று முதல் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த மாவட்ட செயலாளர்களுக்கு திமுக வேண்டுகோள் விடுத்திருந்தது. 

அதன்படி சென்னை, திருச்சி, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் காலி  குடங்களுடன் அதிமுக அரசை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி சென்னை வில்லிவாக்கத்தில் எம்.பி. தயாநிதி மாறன், சேகர் பாபு, ஜாபர்கான்பேட்டையில் மா. சுப்பிரமணியன், திருச்சியில் கே.என். நேரு, திருவண்ணாமலையில் எ.வ.வேலு ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

திருச்சியில் திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கே.என்.நேரு பேசும்போது கூறியதாவது:-

உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டியிட வேண்டும் . உள்ளாட்சி தேர்தலில் திருச்சியிலாவது திமுக தனித்து போட்டியிட, மு.க.ஸ்டாலினை வலியுறுத்துவேன் என கூறினார்.

Next Story