தண்ணீர் பிரச்சினையை திமுக பூதாகரமாக்குகிறது - அமைச்சர் செல்லூர் ராஜூ


தண்ணீர் பிரச்சினையை திமுக பூதாகரமாக்குகிறது - அமைச்சர் செல்லூர் ராஜூ
x
தினத்தந்தி 22 Jun 2019 7:39 AM GMT (Updated: 22 Jun 2019 7:39 AM GMT)

தண்ணீர் பிரச்சினையை திமுக பூதாகரமாக்குவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை,

திருப்பரங்குன்றத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த  அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:-

மதுரை மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தண்ணீர் பிரச்சினையை திமுக பூதாகரமாக்குகிறது. மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க திமுக முனைவதில்லை. 

மதுரையில் குடிநீர் பிரச்சினை இல்லை, இதற்கு காரணம் முதலமைச்சர். அதிமுக தலைமை 'யாகம்' அறிவித்த உடனே சென்னையில் மழை பெய்து விட்டது. இதே போன்று தமிழகம் முழுவதும் மழை பெய்து, மக்களின் குடிநீர் பிரச்சினை தீரும் என கூறினார்.

Next Story