சென்னைக்கு நீர் கொண்டு வருவதன் மூலம் வேலூர் மக்களுக்கு அளிக்கும் நீரின் அளவு குறையாது : துரைமுருகனுக்கு அமைச்சர் பதில்


சென்னைக்கு நீர் கொண்டு வருவதன் மூலம் வேலூர் மக்களுக்கு அளிக்கும் நீரின் அளவு குறையாது : துரைமுருகனுக்கு அமைச்சர் பதில்
x
தினத்தந்தி 22 Jun 2019 8:26 AM GMT (Updated: 22 Jun 2019 8:26 AM GMT)

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு நீர் கொண்டு வருவதன் மூலம் வேலூர் மக்களுக்கு அளிக்கும் நீரின் அளவு குறையாது என அமைச்சர் வேலுமணி கூறி உள்ளார்.

கோவை,

கோவையில் அமைச்சர் வேலுமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் மழைவேண்டி சிறப்பு யாகம் நடந்து வருகிறது, நல்ல மழை வந்து மக்களை காப்பாற்றும்.  சென்னையில் கூடுதலாக தண்ணீர் பிரச்சினை உள்ளது, அதை அரசு சமாளிக்கிறது.

198 நாட்கள் மழை பொழியவில்லை. தண்ணீர் பஞ்சம் இல்லை என்று நான் கூறவில்லை.  காவிரி, கிருஷ்ணா போன்ற அணைகளில் இருந்து நீர் கேட்டு வருகிறோம்.

சென்னை நீர் பற்றாக்குறையை போக்கவே வேலூரில் இருந்து ரெயில் மூலம் நீர் கொண்டு வரப்படுகிறது.சென்னைக்கு நீர் கொண்டு வருவதன் மூலம் வேலூர் மக்களுக்கு அளிக்கும் நீரின் அளவு குறையாது என கூறினார்.

Next Story