தமிழகத்தில் இருந்து கொண்டு தண்ணீர் தர மறுத்தால் கர்நாடகம் எப்படி தண்ணீர் தரும்?-அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி


தமிழகத்தில் இருந்து கொண்டு தண்ணீர் தர மறுத்தால் கர்நாடகம் எப்படி தண்ணீர் தரும்?-அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி
x
தினத்தந்தி 22 Jun 2019 10:44 AM GMT (Updated: 22 Jun 2019 10:44 AM GMT)

தமிழகத்தில் இருந்து கொண்டு தண்ணீர் தர மறுத்தால் கர்நாடகம் எப்படி தண்ணீர் தரும்? என துரைமுருகனுக்கு, அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி விடுத்துள்ளார்.

விழுப்புரம்,

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு திமுக பொருளாளர் துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறித்து அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் விழுப்புரத்தில் நிருபர்கள்  கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் இருந்து கொண்டு, மற்றொரு ஊருக்கு தண்ணீர் தர மாட்டேன் என்று கூறுபவர்களுக்கு, சமுதாயம் மீது என்ன அக்கறை உள்ளது?.  இவர்களே இப்படி கூறினால், கர்நாடகத்தில் இருந்து மட்டும் எப்படி தண்ணீர் தருவார்கள். தமிழகத்திற்குள்ளேயே தண்ணீர் பிரச்சினையை திமுக எழுப்புவது கண்டிக்கத்தக்கது என கூறினார்.

Next Story