ஜூலை 1 முதல் தென்னிந்திய டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்


ஜூலை 1 முதல் தென்னிந்திய டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 22 Jun 2019 12:21 PM GMT (Updated: 22 Jun 2019 12:21 PM GMT)

ஜூலை 1 முதல் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக தென்னிந்திய டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சென்னை,

தென்னிந்திய டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் 700 லாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்காததை கண்டித்தும், விடுபட்ட லாரிகளுக்கும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், வணிக ஒப்பந்தம் வழங்க வலியுறுத்தியும் ஜூலை 1ந் தேதி காலை 6 மணி முதல் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் செய்தால் தென்னிந்தியாவில் கேஸ் விநியோகம் பாதிக்க வாய்ப்புள்ளது. இதனால் சமையல் எரிவாயு விலையும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

Next Story