நடிகர் சங்க தேர்தல்:துரதிர்ஷ்டவசமாக என்னுடைய வாக்கை பதிவு செய்ய இயலவில்லை - ரஜினிகாந்த் டுவீட்


நடிகர் சங்க தேர்தல்:துரதிர்ஷ்டவசமாக  என்னுடைய வாக்கை பதிவு செய்ய இயலவில்லை - ரஜினிகாந்த் டுவீட்
x
தினத்தந்தி 22 Jun 2019 3:43 PM GMT (Updated: 22 Jun 2019 3:43 PM GMT)

நடிகர் சங்க தேர்தலுக்கான தபால் வாக்கு தாமதமாக கிடைத்ததால் வாக்களிக்க இயலாமல் போனதற்கு வருந்துகிறேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

மும்பை,

நடிகர் சங்கத்தேர்தல் ஏற்கனவே அறிவித்தப்படி சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில்  நாளை காலை 7 மணிக்கு தேர்தல் நடைபெறுகிறது.  இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- 

மும்பையில் படப்பிடிப்பில் உள்ள நிலையில் நடிகர் சங்க தேர்தலுக்கான தபால் வாக்கு எனக்கு தாமதமாக கிடைத்தது.

தபால் வாக்கு படிவம் இன்று மாலை 6.45 மணிக்கு வந்ததால் வாக்களிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

தபால் வாக்கு படிவத்தை முன் கூட்டியே பெற முயற்சித்தும் தாமதமாக கிடைத்தது. இது போன்ற துரதிர்ஷ்டவசமான நிலை வரும் காலங்களில் ஏற்படக்கூடாது. 

தாமதமாக தபால் வாக்கு கிடைத்ததால் வாக்களிக்க இயலாமல் போனதற்கு வருந்துகிறேன் என பதிவிட்டுள்ளார். 

இன்று மாலை 5.30 மணியுடன் தபால் வாக்குகளை பதிவு செய்வதற்கான நேரம் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story