நீதிமன்றம் மற்றும் நீதிபதிகளுக்கு நன்றி - நடிகர் விஷால் பேட்டி


நீதிமன்றம் மற்றும் நீதிபதிகளுக்கு நன்றி - நடிகர் விஷால் பேட்டி
x
தினத்தந்தி 22 Jun 2019 4:02 PM GMT (Updated: 22 Jun 2019 4:02 PM GMT)

நீதிமன்றம் மற்றும் நீதிபதிகளுக்கு நன்றி என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.

சென்னை,

பாண்டவர் அணி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- 

3 வாரத்திற்கு முன்பு வரை நடிகர் சங்க தேர்தல் அமைதியாக நடைபெறும் என்றே கருதினோம்.  தேர்தலுக்கு இவ்வளவு பெரிய தடை எதற்காக?  எங்களுடன் 3.5 வருடங்கள் பயணித்தவர்களுக்கு, தேர்தலுக்கு முன்பு மட்டும் எப்படி குறை தெரிந்தது.  விதிமுறைகளை நாங்கள் மீறவில்லை. விதிமுறைப்படியே நாங்கள் செயல்படுகிறோம் இவ்வாறு நாசர் கூறினார்.

இதனையடுத்து, நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்ட நீதிபதிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்களிக்கலாம் என நடிகர் விஷால் கூறினார்.

அவமதிப்பு வழக்கு போடப்பட்டதால் ஐசரி கணேஷ் தேர்தலில் நிற்க தகுதியிழந்துவிட்டார் என்று பூச்சி முருகன் கூறினார்.

Next Story