காஞ்சிபுரத்தில் அத்திவரதர் விழாவையொட்டி பள்ளிகளுக்கு நேரம் குறைப்பு


காஞ்சிபுரத்தில் அத்திவரதர் விழாவையொட்டி பள்ளிகளுக்கு நேரம் குறைப்பு
x
தினத்தந்தி 23 Jun 2019 3:17 PM GMT (Updated: 23 Jun 2019 3:17 PM GMT)

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் விழாவையொட்டி பள்ளிகளின் நேரம் குறைக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் பொன்னையா அறிவித்துள்ளார்.

சென்னை,

புகழ் பெற்ற காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு பிறகு அத்திவரதர் எழுந்தருளி ஜூலை 1-ந்தேதி முதல் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

அத்திவரதர் விழாவையொட்டி கோவிலுக்கு வரும் பக்தர்கள் அத்திவரதரை தரிசிப்பதற்கான வசதிகள், கோவிலுக்கு வெளியே நவீன கழிப்பிடங்கள், குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கையில், 

காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் விழாவையொட்டி பள்ளிகளின்  நேரம் குறைக்கப்பட்டுள்ளது. 
வரதராஜபெருமாள்கோவிலில் அத்திவரதர் விழாவை காண தினமும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள். 

அதனையொட்டி  காஞ்சிபுரம் நகராட்சியில் பள்ளிகள் ஜூலை 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 17-ம் தேதி வரை காலை 8.30 முதல் மதியம் 1.30 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

காஞ்சிபுரத்தில் மட்டும் 48 நாட்களுக்கு பள்ளிகள் நேரம் குறைக்கப்படுவதாக கலெக்டர் பொன்னையா அறிவித்துள்ளார்.

Next Story