கடைவீதியில் புகுந்து வாலிபரை துதிக்கையால் தாக்கிய காட்டுயானை


கடைவீதியில் புகுந்து வாலிபரை துதிக்கையால் தாக்கிய காட்டுயானை
x
தினத்தந்தி 24 Jun 2019 9:45 PM GMT (Updated: 24 Jun 2019 9:16 PM GMT)

குன்னூர் அருகே சாலையோரத்தில் நடந்து சென்ற வாலிபரை காட்டுயானை துதிக்கையால் தாக்கியது.

குன்னூர்,

குன்னூர் அருகே கொலக்கம்பை, தூதூர்மட்டம், மானார், மூப்பர் காடு ஆகிய ஆதிவாசி கிராமங்கள் இருக்கின்றன. இந்த கிராமங்களை ஒட்டி தேயிலை தோட்டங்களும், அதனை சுற்றி வனப்பகுதிகளும் அமைந்துள்ளன. இந்த நிலையில் வனப்பகுதியில் உணவு, தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக வனவிலங்குகள் தேயிலை தோட்டம் வழியாக கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. கடந்த 22-ந் தேதி வனப் பகுதியில் இருந்து வெளியேறிய 4 காட்டுயானைகள் தூதூர்மட்டம் பகுதியில் விவசாய பயிர்களை நாசம் செய்தன. இந்த கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றை யானை கொலக்கம்பை பஜாரில் புகுந்தது. அப்போது சாலையோரத்தில் நடந்து சென்ற ஒரு வாலிபரை துதிக்கையால் தாக்கியது. இதில் அவர் காயமின்றி உயிர் தப்பினார். அதன்பின்னர் அந்த காட்டுயானை அங்கிருந்து அருகிலுள்ள தேயிலை தோட்டம் வழியாக வனப்பகுதிக்குள் சென்றது.

Next Story