டெல்டா பாசனத்திற்கு நீர் திறக்க வரப்போகும் சிக்கல்:அரசு தீவிர கவனம் செலுத்த மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


டெல்டா பாசனத்திற்கு நீர் திறக்க வரப்போகும் சிக்கல்:அரசு தீவிர கவனம் செலுத்த மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 31 July 2019 2:47 PM GMT (Updated: 31 July 2019 2:47 PM GMT)

தமிழக அணைகளில் குறைவாகவே நீர் உள்ளது என்பது வேதனை அளிக்கிறது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- 

தென்மேற்கு பருவகாலம் 50% முடிவடைந்த நிலையில் தமிழக அணைகளில் 20%-க்கும் குறைவாகவே நீர் உள்ளது என்பது வேதனைச் செய்தி. டெல்டா பாசனத்திற்கு நீர் திறக்க வரப்போகும் சிக்கல் மற்றும் மழை பற்றாக்குறையை சமாளிக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

Next Story