தமிழகத்தில் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவு


தமிழகத்தில் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்:  தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவு
x
தினத்தந்தி 31 July 2019 4:14 PM GMT (Updated: 31 July 2019 4:14 PM GMT)

தமிழகத்தில் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் உள்பட முக்கிய அதிகாரிகள் திடீரென மாற்றப்பட்டு இருக்கிறார்கள்.

தலைமை செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள உத்தரவில்.

* நுகர்பொருள் விநியோக ஆணையராக இருந்த மதுமதி சமூக நலத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ப்பு திட்ட இயக்குனர் கண்ணன் நுகர்பொருள் விநியோக ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* அருங்காட்சியக இயக்குநராக இருந்த கவிதா ராமு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ப்பு திட்ட இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளராக இருந்த ஆபிரகாம், சமூக நலத்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* பொதுப்பணித்துறை செயலாளராக இருந்த பிரபாகர், நெடுஞ்சாலைத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* சமூகநலத்துறை செயலாளராக இருந்த மணிவாசன், பொதுப்பணித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story