மாநில செய்திகள்

வேலூர் தொகுதியில் திமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது - மு.க.ஸ்டாலின் + "||" + No one can stop DMK's victory MK Stalin

வேலூர் தொகுதியில் திமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது - மு.க.ஸ்டாலின்

வேலூர் தொகுதியில் திமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது -   மு.க.ஸ்டாலின்
வேலூர் தொகுதியில் திமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.
வேலூர்,

வேலூரில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- 

திமுக வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. எத்தனை லட்சம் வாக்குகள் என்பதைத்தான் உறுதி செய்ய வேண்டும்.  வேலூர் தொகுதியில் திமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. வேலூர் தேர்தலை நிறுத்த வருமான வரித்துறையை துணையாகக்கொண்டு சூழ்ச்சி செய்தனர். 

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மீது கருணாநிதிக்கும், எனக்கும் மிகுந்த மரியாதை இருந்தது. என்னை பார்த்து சிரித்ததால் தனது முதலமைச்சர் பதவியை ஓ.பன்னீர் செல்வம் இழந்தார்.

அப்துல் கலாமை கொச்சைப்படுத்தும் வகையில் ஓபிஎஸ் பேசியது கண்டிக்கத்தக்கது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தவரை தமிழகத்தில் நீட் தேர்வு நுழைய முடியவில்லை. ஜெயலலிதா மீது விமர்சனங்கள் இருந்தாலும் அவர் தைரியமானவர் என்பதில் சந்தேகம் இல்லை.

நீட் தீர்மானத்தை மத்திய அரசு திருப்பி அனுப்பியதை பேரவையில் தமிழக அரசு கூறவில்லை. நீட் தேர்வால் தமிழக மாணவர்களின் தற்கொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.