மாநில செய்திகள்

ரஜினிகாந்திடம் இருந்து மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை எதிர்பார்க்க முடியாது - திருமாவளவன் + "||" + We cannot expect anti-government remarks from Rajinikanth- Thirumavalavan

ரஜினிகாந்திடம் இருந்து மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை எதிர்பார்க்க முடியாது - திருமாவளவன்

ரஜினிகாந்திடம் இருந்து மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை எதிர்பார்க்க முடியாது - திருமாவளவன்
ரஜினிகாந்திடம் இருந்து மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை எதிர்பார்க்க முடியாது என்று தொல். திருமாவளவன் எம்.பி., தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர்,

துணை  ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவர்களின் பணி குறித்த ஆவணப் புத்தகம் ஒன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று வெளியிடப்பட்டது. உள்துறை மந்திரி அமித்ஷா இந்த புத்தகத்தினை வெளியிட்டார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்ட புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த்தும் பங்கேற்றார். 

இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசிய போது,“அமித்ஷாவும் மோடியும், கிருஷ்ணன் - அர்ஜூனன் போன்றவர்கள். காஷ்மீர் விவகாரத்திற்காக அமித்ஷாவுக்கு வாழ்த்துக்கள் காஷ்மீரை இரண்டாக பிரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை சிறப்பானது” என்றார்.

இது குறித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பி.,யுமான தொல்.திருமாவளவன் திருச்செந்தூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 

“மோடி-அமித்ஷாவை மகாபாரதத்தில் இருந்து கிருஷ்ணன்-அர்ஜுனனுக்கு உவமையாக ரஜினிகாந்த் கூறியதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. ரஜினிகாந்திடம் இருந்து மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை எதிர்பார்க்க முடியாது. எனவே ரஜினியின் கருத்தில் எந்த ஆட்சேபனையும் இல்லை” என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீர் விவகாரம்: ரஜினிகாந்த் கருத்துக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ ஆதரவு
காஷ்மீர் விவகாரத்தில் ரஜினிகாந்த் கருத்துக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ ஆதரவு தெரிவித்துள்ளார்.
2. தேசிய விருது, காஷ்மீர் விவகாரம், அரசியல்கட்சி தொடக்கம் தொடர்பான கேள்விகளுக்கு ரஜினிகாந்தின் பதில்கள்:-
காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு ராஜதந்திரத்துடன் செயல்பட்டுள்ளது என நடிகர் ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.
3. 45-வது நாள்: அத்திவரதரை குடும்பத்துடன் நள்ளிரவில் தரிசித்த ரஜினிகாந்த்!
காஞ்சீபுரம் அத்திவரதர் உற்சவத்தின் 45-வது நாளின் நள்ளிரவில் குடும்பத்துடன் ரஜினிகாந்த் தரிசித்தார்.
4. மத்திய அரசுக்கு எதிரான கருத்துகளை ரஜினிகாந்திடம் எதிர்பார்க்க முடியாது - தொல். திருமாவளவன் தாக்கு
மத்திய அரசுக்கு எதிரான கருத்துகளை ரஜினிகாந்திடம் இருந்து எதிர்பார்க்க முடியாது என்று தொல்.திருமாவளவன் கூறினார்.
5. அமித்ஷாவும் பிரதமர் மோடியும் கிருஷ்ணன்- அர்ஜூனன் போன்றவர்கள்: ரஜினிகாந்த்
அமித்ஷாவும், மோடியும், கிருஷ்ணன் - அர்ஜூனன் போன்றவர்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.