மேட்டூர் அணை பாசனத்திற்காக நாளை திறக்கப்படும் : தமிழக அரசு அறிவிப்பு


மேட்டூர் அணை பாசனத்திற்காக நாளை திறக்கப்படும் : தமிழக அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 12 Aug 2019 5:05 AM GMT (Updated: 12 Aug 2019 5:05 AM GMT)

மேட்டூர் அணை பாசனத்திற்காக நாளை திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை,

கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூருக்கு வருகிறது. தற்போது வினாடிக்கு 1 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வருவதால் ஒகேனக்கல் மேட்டூர் இடையே காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு  நீர்வரத்து அதிகரித்து வருகிறது. மேலும் அணையின் நீர்மட்டமும் கிடுகிடு என உயர்ந்து வருகிறது.

மேட்டூர்  அணைக்கு நீர்வரத்து காலை 10 மணி நிலவரப்படி 2.10 லட்சம் கன அடியாக உள்ளது.

நேற்று அணையின் நீர் மட்டம் 67 அடியாக இருந்த நிலையில், ஒரே நாளில் 15 அடி அதிகரித்து அணையின் நீர் மட்டம் 82.62 அடியாக உள்ளது. அணையில் நீர்  இருப்பு 44.61 டி.எம்.சி.யாக உள்ளது. குடிநீருக்காக வினாடிக்கு 1000 கன அடி திறக்கப்படுகிறது.

மேட்டூர் அணையின் நீர் மட்டம் நாளை மாலைக்குள் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக நாளை தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

காவிரி பாசன விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Next Story