73வது சுதந்திர தினம்; தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய யானைகள்


73வது சுதந்திர தினம்; தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய யானைகள்
x
தினத்தந்தி 15 Aug 2019 10:25 AM GMT (Updated: 15 Aug 2019 10:25 AM GMT)

இந்தியாவில் 73வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு ஊட்டியில் யானைகள் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தின.

ஊட்டி,

இந்தியாவில் 73வது சுதந்திர தினம் கோலாகலமுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.  தலைவர்கள் தேசிய கொடியை ஏற்றி அதற்கு உரிய மரியாதையை செலுத்தினர்.  நாட்டுப்பற்றை உணர்த்தும் வகையில் சிறுவர், சிறுமிகள் தேசிய கொடிகளை தங்களது சட்டைகளில் அணிந்தபடி சென்றனர்.  அவர்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டன.

இதேபோன்று ஊட்டி முதுமலை, தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் வரிசையாக அணிவகுத்தபடி நிற்க வைக்கப்பட்டன.  இதன்பின் வனத்துறையினர் தேசிய கொடியை ஏற்றி, சுதந்திர தினத்தை கொண்டாடினர்.

அப்போது, வரிசையாக நின்றிருந்த அனைத்து யானைகளும் தும்பிக்கையை தூக்கி பிளிறியபடி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தின.  இது காண்போரை அதிசயிக்க வைத்தது.

Next Story