அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களின் விபத்து காப்பீட்டு திட்டத்தில் கூடுதல் அறிவிப்புகள்


அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களின் விபத்து காப்பீட்டு திட்டத்தில் கூடுதல் அறிவிப்புகள்
x
தினத்தந்தி 29 Aug 2019 11:04 AM GMT (Updated: 29 Aug 2019 12:29 PM GMT)

அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான விபத்து காப்பீட்டு திட்டத்தில் கூடுதல் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.

சென்னை,

அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான விபத்து காப்பீட்டு திட்டத்தில் கூடுதல் அறிவிப்புகளை பள்ளி கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டு உள்ளார்.

இதன்படி, விடுமுறை நாளில், நீர் நிலைகளில் சிக்கி மாணவர்கள் இறந்தாலும் அரசின் நிவாரணம் வழங்கப்படும்.  பள்ளிகளில் மின் கசிவு மற்றும் ஆய்வக விபத்துகளில் மாணவர்கள் சிக்கினாலும் நிவாரணம் வழங்கப்படும்.

இதேபோன்று விஷ பூச்சிகள் கடித்து மாணவர்கள் பாதிக்கப்பட்டாலும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Next Story