சென்னை மாநகர் முழுவதும் இடியுடன் கூடிய கனமழை


சென்னை மாநகர் முழுவதும்  இடியுடன் கூடிய கனமழை
x
தினத்தந்தி 30 Aug 2019 12:40 PM GMT (Updated: 30 Aug 2019 12:40 PM GMT)

சென்னை மாநகர் முழுவதும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

சென்னை,

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. தரமணி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, எழும்பூர், சென்ட்ரல், அரும்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. நேற்று முன்தினமும் இதுபோல் கனமழை பெய்தது குறிப்பிடத்தக்கது

தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி வருவதால் அந்த பகுதிகளுக்கு அடுத்த ஐந்து நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். மத்திய மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிகளிலும் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதால் அந்த பகுதிகளுக்கும் மீனவர்கள் அடுத்த ஐந்து நாட்களுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை மாவட்டம் மேலூரில் 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதிகளில் 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

பெரம்பலூர் செட்டிக்குளம், நாகை மயிலாடுதுறை பகுதிகளில் 5 சென்டிமீட்டர் மழையும், பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர், கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை, தருமபுரி, நீலகிரி மாவட்டம் தேவாலா, குன்னூர், திருச்சி துறையூர் பகுதிகளில் 4 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

Next Story