வழக்கிலிருந்து விரைவில் விடுதலையாக வேண்டி நிர்மலா தேவி 2 வது முறையாக மொட்டையடித்தபடி நீதிமன்றத்தில் ஆஜரானார்.
விருதுநகர்,
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த பேராசிரியை நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
வழக்கிலிருந்து விரைவில் விடுதலையாக வேண்டி பேராசிரியர் நிர்மலா தேவி 2 வது முறையாக மொட்டையடித்தபடி நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அடுத்த மாதம் அக்டோபர் 4 ஆம் தேதி மூன்று பேரும் கண்டிப்பாக வழக்கறிஞர்களுடன் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கூறப்படும் வழக்கில், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரான பேராசிரியை நிர்மலாதேவி, நீதிமன்ற வளாகத்திலேயே தியானத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.