வெங்காய வியாபாரிகள் வெங்காயத்தை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடு


வெங்காய வியாபாரிகள் வெங்காயத்தை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடு
x
தினத்தந்தி 29 Sep 2019 1:16 PM GMT (Updated: 29 Sep 2019 1:16 PM GMT)

வெங்காய வியாபாரிகள் வெங்காயத்தை இருப்பு வைக்க மத்திய அரசு கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது.

புதுடெல்லி,

மஹாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கன மழையால் இம்மாநிலங்களில்  வெங்காயம் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்  வெங்காயம் அறுவடை தாமதமாகும் வாய்ப்புள்ளது. தொடர்ந்து பண்டிகைகள் வருவதால் வெங்காயத்தை பதுக்கி அவற்றை கூடுதல் விலைக்கு விற்கும் நடவடிக்கைகளை மொத்த வியாபாரிகளும்  'ஆன்லைன்' வர்த்தகத்தை துவக்கியுள்ளனர். இதனால் நாடு முழுவதும் வெங்காயம் விலை உயர்ந்து வருகிறது.

இதனையடுத்து உள்நாட்டில், வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தும் வகையில் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்த நிலையில் வெங்காய வியாபாரிகள் வெங்காயத்தை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.மேலும் சில்லறை வியாபாரிகள் 100 குவிண்டால், மொத்த வியாபாரிகள் 500 குவிண்டால் மட்டுமே வெங்காயம் இருப்பு வைத்திருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறித்தியுள்ளது.

Next Story