ஒத்துழைப்பு தந்தால் ஆன்லைனில் திரைப்படம் வெளியாவதை தடுக்க முடியும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ


ஒத்துழைப்பு தந்தால் ஆன்லைனில் திரைப்படம் வெளியாவதை தடுக்க முடியும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ
x
தினத்தந்தி 29 Sep 2019 2:07 PM GMT (Updated: 29 Sep 2019 2:07 PM GMT)

திரைப்பட தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஒத்துழைப்பு தந்தால் தான் ஆன்லைனில் திரைப்படம் வெளியாவதை தடுக்க முடியும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சென்னை,

அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- 

திரைப்பட தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஒத்துழைப்பு தந்தால்தான் ஆன்லைனில் திரைப்படம் வெளியாவதை தடுக்க முடியும். ஆன்லைன் டிக்கெட் விற்பனை முறையை அவசர கோலத்தில் செயல்படுத்த முடியாது.

தமிழக பாடத்திட்டத்தில் வர்மக் கலையை சேர்க்க அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும்.  ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கும் பணிகளை கிடப்பில் ஏதும் போடவில்லை எனத் தெரிவித்தார்.

Next Story