விக்கிரவாண்டி- நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர்கள் மனு தாக்கல்


விக்கிரவாண்டி- நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர்கள் மனு தாக்கல்
x
தினத்தந்தி 30 Sep 2019 9:39 AM GMT (Updated: 30 Sep 2019 9:39 AM GMT)

நெல்லை மாவட்டம் நாங்குநேரி மற்றும் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல்களில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்.

சென்னை, 

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வழங்கினர்.

நாங்குநேரி தொகுதியில் அதிமுக சார்பில் நெல்லை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலர் நாராயணன் போட்டியிடுகிறார். அவர் தமது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி நடேசனிடன் வழங்கினார்.இதேபோல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் காணை ஒன்றிய அதிமுக செயலாளர் முத்தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். அவர் தமது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகரிடம் வழங்கினார். வேட்புமனு தாக்கலின்போது சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் மற்றும் கூட்டணி கட்சிப் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

Next Story