ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த குழந்தை சுஜித் உடல் மீட்பு


ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த குழந்தை சுஜித் உடல் மீட்பு
x
தினத்தந்தி 28 Oct 2019 11:39 PM GMT (Updated: 29 Oct 2019 12:04 AM GMT)

ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த குழந்தை சுஜித் உடல் மீட்கப்பட்டது

திருச்சி,

திருச்சி மணப்பாறை அருகே 25-ம் தேதி மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில்  விழுந்த 2 வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணிகள் சுமார் 80  மணி நேரமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், ஆழ்துளை கிணற்றில் இரவு 10.30 மணியளவிலிருந்து குழந்தையின் உடலில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும், ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த குழந்தை உயிரிழந்த‌தாக அதிகாலை 2.30 மணியளவில் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.

இந்நிலையில், ஆழ்துளை கிணற்றில் விழுந்து ஐந்தாவது நாளில்  88 அடி ஆழத்தில் இருந்து குழந்தை சுஜித்தின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டு  பிரேதபரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது.

Next Story